ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப்பில் இலங்கையைச் சேர்ந்த ருமேஷ் தரங்க, தங்கப்பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அது மாத்திரமன்றி, சுமேத ரணசிங்க மற்றும் தில்ஹானி லேகம் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்று தாயகத்திற்கு பெருமை ஈட்டிக் கொடுத்துள்ளனர்.
இரண்டாவது தடவையாக நடத்தப்படும் ஆசிய எறிதல் சம்பியன்ஷிப் தொடருக்கான அனுசரணையை தென் கொரியா வழங்குகிறது.
ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ருமேஷ் தரங்க 85.5 மீட்டருக்கு திறமையை வெளிப்படுத்தினார். இது இலங்கை சாதனையாகவும் போட்டி சாதனையாகவும் பதிவானது.
எவ்வாறாயினும், 5 சென்டிமீட்டரால் அவர் ஒலிம்பிக் விழாவுக்கான வாய்ப்பை இழந்தார். ஒலிம்பிக் விழாவுக்கு தகுதி பெறுவதாயின், 85.50 மீட்டருக்கு திறமையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
இதேவேளை, இந்த போட்டியில் மற்றுமொரு இலங்கை வீரரான சுமேத ரணசிங்க வெண்கலப்பதக்கம் வென்றார்.
போட்டியில் அவர் 77.57 மீட்டருக்கு திறமையை வெளிப்படுத்தினார்.
மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் தில்ஹானி லேகம்கே வெண்கலப்பதக்கம் வென்றார்.
போட்டியில் அவர் 57.94 மீட்டர் தூரத்திற்கு திறமையை வெளிப்படுத்தினார்.