யாழ்,திருமலை, அம்பாறை அபாய வலயமாக அறிவிக்கப்பட்டது !
யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அண்மைக் காலமாக டெங்கு நோய்த் தொற்று அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் தை மாதத்தில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7000 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இருவர் டெங்கு காரணமாக உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெங்கு தொடர்பான மக்களின் அசண்டையீனமே டெங்கு பரவக் காரணம். சுகாதார பிரிவினர் வீடுகளுக்கு வந்து சுற்றுச்சூழல் தொடர்பில் பரிசோதனை செய்யும்வரை அலட்சியமாக செயற்படாமல் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்கண்டு சுத்தம் செய்யுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.