By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: இலங்கையரின் உரிமைக்காக முன்நின்ற தலைவரே சம்பந்தன்; அஞ்சலி உரையில் ரணில் புகழாரம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

இலங்கையரின் உரிமைக்காக முன்நின்ற தலைவரே சம்பந்தன்; அஞ்சலி உரையில் ரணில் புகழாரம்!

Published July 8, 2024
Share
1 Min Read
SHARE

மறைந்த ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் உரிமைகளுக்காகவும் முன் நின்ற தலைவர் என்றும் சம்பந்தனும் தானும் எப்போதும் பிரிக்கப்படாத இலங்கைக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆர். சம்பந்தனுடன் உடன்பாட்டுடன் முன்நோக்கி கொண்டு வந்த அந்தக் கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

திருகோணமலையில் அன்னாரது இல்லத்தில் நேற்று (07) பிற்பகல் நடைபெற்ற சம்பந்தனின் இறுதி கிரியையில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த ஆர். இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியைகள், நேற்று (07) பிற்பகல் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

ஆர். சம்பந்தன் எப்பொழுதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தேசிய காணி ஆணைக்குழுவின் வரைவு தற்போது பாராளுமன்றத்தில் சமர்பிக்க தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வனவளத் திணைக்களத்துடன் இருக்கும் பிரச்சினைகளை சட்டரீதியாக தீர்க்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தனின் பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஒரு மாற்றுப் பிரதமர் என்று குறிப்பிட்டதுடன், ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, உண்மையான எதிர்க்கட்சித் தலைவரின் பண்புகளை வெளிப்படுத்தியதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

TAGGED: இலங்கையரின் உரிமைக்காக முன்நின்ற தலைவரே சம்பந்தன்; அஞ்சலி உரையில் ரணில் புகழாரம்!
Editor S.Shanuja July 8, 2024 July 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக அரச வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!
Next Article கொழும்பு- அதுருகிரியவில் துப்பாக்கிச்சூடு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Uncategorized

ரணிலுக்கு பதிலடி கொடுத்த ஹரிணி அமரசூரிய!

October 31, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?