வைத்தியர் அர்ச்சுனாவை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை காலை முதல் (08) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மாபெரும் போராட்டமொன்று மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போராட்டத்தின் போது வைத்தியருக்கு தண்ணீர் கூட வழங்க விடாமல் அதிகாரிகள் தடுத்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலை சுகயீனமடைந்தது. அதன்பின்னர் போராட்டக்காரர்கள் மீண்டும் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது வரை மக்களின் ஆதரவுடன் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.