இன்று (10) நண்பகல் 12 மணிக்கு முன்னர் அனைத்து ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் உரிய புகையிரத நிலையத்திற்கோ அல்லது அருகில் உள்ள புகையிரத நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்குமாறு ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே தெரிவித்துள்ளார்.
கட்டளைக்கு இணங்காத அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சேவையை விட்டு வெளியேறியதாக கருதப்படும் என்று அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களுக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்படுவதாக முதலிகே கூறினார்.
இதேவேளை, தங்களால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன.