விடுதலைப்புலிகளின் தலைவர் பிராபகரனை விட நாட்டுக்கு மிக மோசமான அழிவைத் ராஜபக்ச குடும்பத்தினர் தற்போது தேடித்தந்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முப்பது வருட போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறும் ராஜபக்ச குடும்பம் நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றது.
அரசாங்கத்திலும் இருக்கும் பலருக்கும், ராஜபக்சவினருக்கு வாக்களித்தவர்களும் இந்த அழிவை புரிந்துக்கொண்டுள்ளனர். நாட்டை மிக மோசமான நிதி நெருக்கடி நோக்கி கொண்டு சென்றவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர் என்பது உலகத்திற்கு தெளிவாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவாகி பல மாதங்கள் முக்கிய அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிக்க முடியாமல் போனது. இதன் மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல ஜனாதிபதி தயாரில்லை என்பது தெளிவானது எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.