2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (15) வேட்புமனுக்களை சமர்ப்பித்த 39 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட மூன்று ஆட்சேபனைகளும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப் பணங்களைச் செலுத்திய 40 வேட்பாளர்களில் 39 பேர் தமது வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.