கடந்த 30வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று வெள்ளிக்கிழமை ஆலயத்திற்க்கு நிர்வாகத்தினரும் மக்களும் சென்றுள்ள நிலையில் பொங்கல் வழிபாடுகளும் இடம்பெற்றது.
இந்தநிலையில் ஆலயம் சிதிலமடைந்துள்ளதுடன் விக்கிரகங்கள் உடைந்தநிலையில் உள்ளது. இதனை பார்த்த பக்தர்கள் தமது ஊரின் நிலையை பார்த்து மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டழுததையும் ஆலயத்தின் நிலையை பார்த்து மிகவும் கவலையடைந்து காணப்படுகின்றனர்.