மீனவர்களை அவமதித்த டக்ளஸ் தேவானந்தா மன்னிப்புக் கோரவேண்டும்_ சாணக்கியன்!
மீனவர்கள் தமது உரிமைக்காக தொடர்ந்து போராடி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை டக்ளஸ் தேவானந்தா அவமதித்தமைக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடி போராட்டத்திற்கான ஆதரவினை தெரிவித்திருந்தனர்.
மீனவர்கள் மத்தியில் உரையாற்றிய சாணக்கியன் தமது உரிமைக்காக போராடிய எங்கள் மீனவர்களை அவமதிக்கும் வகையில் மது போதையில் போராடுவதாக தெரிவித்துள்ளார். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். மீனவர்களை அவமதித்த டக்ளஸ் தேவானந்தா மீனவர்கள் முன்னிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
அத்துடன் மீனவர்களது கோரிக்கையினை நிறைவேற்ற முடியாத கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவி விலகவேண்டும் என தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி வடக்கில் பல இடங்களில் மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.