ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 41 (1) பிரிவின் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டது.
சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவருக்குக் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.