குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மாதாந்தம் 10000 ரூபா வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமாகிய அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டினால் ஊழல் மோசடிகள், மக்களின் பணம் களவாடுதல் நிறுத்தப்படும்.
ஊழல் மோசடிகளை இல்லதொழித்து வறிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் திட்டம் எம்மிடம் உள்ளது.
கிராமிய பொருளாதாரம், சிறு கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உண்டு.
தமது ஆட்சியில் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்களை குறைப்பதுடன் வறியவர்களுக்கு மாதாந்தம் 10000 ரூபா வழங்கப்படும்” என்றார்.
எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் எனவும் உணவு மற்றும் கல்விக்கான பெறுமதி சேர் வரி நீக்கப்படும். பிணையின்றி கடன் வழங்குவதற்கான அபிவிருத்தி வங்கியொன்று அறிமுகம் செய்யப்படும்.
செலுத்தப்படாத வரி நிலுவைகள் மீள அறவீடு செய்யப்படும். தமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதன் பின்னர் யாரிடமும் பழிவாங்கப் போவதில்லை என்பதுடன் களவாடப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்” என்றார்.