கொழும்பு துறைமுகத்திற்கு மீள் நிரப்பும் பணிக்காக இன்று (21) வந்தடைந்த அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஒகேன் என்ற கப்பல் இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டது.
154 மீட்டர் நீளம் கொண்ட யு.எஸ்.எஸ். ஒகேன் கப்பலை அமெரிக்காவின் கடற்படைத் தளபதிகளில் ஒருவரான ரிச்சர்ட் ரேயின் தலைமையில் சுமார் 328 பணியாளர்களைக் கொண்டு இயக்கப்படுகின்றது.
நிரப்பும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து இக்கப்பல் நாளை (22) இலங்கையிலிருந்து புறப்பட உள்ளது.