இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைதான தமிழகத்தைச் சேர்ந்த 11 இந்திய மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
இது தொடர்பான கோரிக்கை அடங்கிய கடிதத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ளார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.