முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த ஐயன்கன்குளம் மகாவித்தியாலயத்திற்கு தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையினால் நூலகப் பேருந்து நேற்று (30) பிற்பகல் 3:00 மணியளவில் கையளிக்கப்பட்டது .
நூலக பேருந்து தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையின் உதவிப் பணிப்பாளர் சமிந்த டி சில்வா மற்றும் மிகிர அரவிந்த, சபையின் தகவல் உதவியாளர் சி.எம் ஷபீக் ஆகியோரில் பேருந்து நேற்று பாடசாலை அதிபர் திருமதி கீதா பாலசிங்கம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாடசாலை வலய கல்வி பணிமனை அதிகாரிகள், அபிவிருத்திச் சங்கம், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், கிராம நலன் விரும்பிகள், எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.