டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
விலைச் சூத்திரத்தின் பிரகாரம் பஸ் கட்டணத் திருத்தம் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்த விஜேரத்ன, விலைத் திருத்தத்திற்கு 4 வீதமான சூத்திரத்தின் தாக்கம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
10 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டமை விலை சூத்திரத்தில் 4 வீதத்தால் பாதிப்பை ஏற்படுத்தாது எனவே கட்டண திருத்தம் எதுவும் இல்லை எனவும் கெமுனு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.