ஜனாதிபதி வேட்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தின் பதிவொன்றின் மூலம் சுமந்திரன் அனுரகுமாரவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், ”இனவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட கொள்கை நிலைப்பாட்டிற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்திருக்கும் நிலையில் சுமந்திரன் அனுரகுமாரவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.