பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாருக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறான மற்றும் பொய்யான தகவல்களை வெளியிடுவதை தடுக்குமாறு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன்விதான பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிற்கு வியாழக்கிழமை தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தயாசிறி ஜயசேகரவை பிரதிவாதியாக குறிப்பிட்டு வேலு குமார எம்.பி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னரே இந்த தடை உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.
அக்குரஸ்ஸவில் ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த கருத்து தவறானது மற்றும் தீங்கிழைக்கும் காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட பாரபட்சத்திற்காக 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முறைப்பாட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் மூலம் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மாவட்ட நீதிபதி, தயாசிறி ஜயசேகரவின் முகநூல் பக்கத்திலோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் முகநூல் பக்கம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலோ அது தொடர்பான பதிவுகளை மேலும் வெளியிடுவதைத் தடுக்கும் தடை உத்தரவு பிறப்பித்ததுடன், இது தொடர்பாக வரும் 19ம் திகதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.