பூசாரியை நிர்வாணமாக்கி காசு பறித்தவர் கைது!
பூசாரி ஒருவரை நிர்வாணமாக்கி கப்பமாக பெருந்தொகைப் பணத்தை பெற்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து கெருடாவில் பகுதிக்கு பூஜை செய்ய வந்த பூசாரியிடம் இவ்வாறு கப்பம் பெறப்பட்டுள்ளது என பொலீஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் அன்றைய தினம் அடையாள அணிவகுப்பை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.