ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டியில் பிரச்சார பேரணி ஆரம்பிக்கப்பட்டவுடன் குறித்த இடத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.