தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மிருகவதைச் சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்று பகுதியில் இருந்து 21 ஆடுகளை கூலர் வாகனத்தில் சுகாதார வசதிகள், தண்ணீர், உணவு உள்ளிட்ட வசதிகளும் கால்நடைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்காமல் வாகனத்தில் முழுமையாக மூடி அடைக்கப்பட்டு கொண்டு சென்ற வேளை வீதி சோதனையின் போது தருமபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பாட்டார்.
குறித்த கால்நடைகளை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கான கால்நடை வைத்தியரின் அனுமதிப்பத்திரம் இன்றி அனுராதபும் மாவட்டத்திற்கு கொண்டு செல்ல முற்ப்பட்ட வேளை கைது செய்யப்பட்டார்.
அத்துடன் வாகனம் மற்றும் கால்நடைகளைக் கொண்டு சென்ற வாகனத்தின் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.