தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று நல்லூரிலுள்ள நினைவிடத்தில் ஆரம்பமானது.
உலகின் முதல் தமிழ் அகிம்சை போராளி தியாக தீபம் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாள் இன்று.
1987ம் ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி ஐந்து அம்ச கோரிக்கைகளை வைத்து உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் 37 வருடங்களாகின்றன.
தியாக தீபம் திலீபன் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் தனது உண்ணா விரதப் போராட்டத்தை மேற்கொண்டு 26/09/1987 வீரச்சாவைத் தழுவி அகிம்சைப் போராட்டத்திற்கு உண்மையான வடிவம் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.