எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையானது தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவால் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித்தேர்தல் தொடர்பான தீர்மானம் மிக்க உயர்மட்ட கலந்துரையாடல் வவுனியா தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (16) நடைபெற்றது. இதன்போதே சஜித்துக்கு ஆதரவு வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.