திருகோணமலையில் கடந்த 2006.01.02 அன்று படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 16 ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்கள் நினைவாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.