இந்தியா – கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளாவில் மலப்புரத்தில் 23 வயது மாணவர் அண்மையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு நிபா வைரஸ் உறுதியானது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் நிபா வைரசால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, வைரஸ் பரவாமல் தடுக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள் மற்றும் திரையரங்குகள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுக்கூட்டங்களும் நடத்த தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.