கம்பஹா, கடவத்தைவில் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றை அதிகாரிகள் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது பலர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பங்கேற்றிருந்ததுடன், அவர்களில் சிலர் ஒழுக்ககேடாக மேலாடையின்றி இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாத்தறையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய போதைப்பொருள் விருந்து ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. சுமார் 600இற்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்ட நிலையில் போதைப்பொருளுடன் 25 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.