தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவிற்கு தீவிரமாக பிரசாரம் செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை வெளியான முடிவுகளின் படி முன்னிலையில் அனுரகுமார இருப்பதால் அவரே புதிய ஜனாதிபதி என்பது தெளிவாக தென்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நண்பர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.