எட்டு வருடங்களாக விற்கப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள்!
புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாள் கசிந்த நிலையில், குறித்த பரீட்சையை மீண்டும் நடத்துவதா இல்லையா என்பது குறித்து இந்த வாரத்திற்குள் தீர்மானம் எடுக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் இருந்து இதுவரை இடைக்கால அறிக்கையை பரீட்சைகள் திணைக்களம் பெற்றுக் கொள்ளாதமையே முடிவு எடுப்பதற்கு தாமதமாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சினைகளை விவாதித்த ஆசிரியர் தலைமறைவாகியுள்ளதால் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து பரீட்சைகள் திணைக்களத்திற்கு வந்து தற்போது ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர், எட்டு வருடங்களாக பணத்திற்கு வினாத்தாள்களை விற்பனை செய்து வந்துள்ளார் என புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.