நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு 11 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது – . தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை ஜனாதிபதியே பெற்றுக்கொடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக 11 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு திறைசேரியில் இருந்து ஜனாதிபதியினால் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில், கலைக்கப்பட்ட தினத்திலிருந்து இரு மாதங்களில் பொதுத் தேர்தலை நடத்தியாக வேண்டும். ஆனால், 2024ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பொதுத் தேர்தலுக்காக நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை.
அவ்வாறு தேர்தலை நடத்துவதென்றால் அதற்கு 11 பில்லியன் ரூபா தேவைப்படும். எனவே, பொதுத் தேர்தலின் நிதிச் செலவுக்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்கவேண்டும்’’ என்று தேர்தல் ஆணை யாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.