யாழில் பச்சைமிளகாய் திருடிய குற்றச்சாட்டில் இருவருக்கு விளக்கமறியல்!
மயிலங்காடு புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தோட்டத்தில் பச்சை மிளகாய் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருட்டுச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்தேக நபர்கள் இருவரும் தலா 10 மற்றும் 15 கிலோ பச்சை மிளகாய்களை திருடியதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சந்தேகநபர்கள் மது போதைக்கு அடிமையானவர்களா என்பதை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் பொலிஸாருக்கு பணித்தார்.