குற்றவாளிகளை கைது செய்து குற்ற செயல்களை கட்டுப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் சடலத்தை வீதியில் வைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த மக்கள் போராட்டம் இன்று (04) காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி பிரதான வீதியை மறித்து இடம்பெற்றது.
இன்று காலை 10 மணியளவில் கொலை செய்யப்பட்ட இளைஞனின் இறுதி கிரியைகள் இடம்பெற்றதை தொடர்ந்து இளைஞனின் சடலம் மக்கள் பேரணியுடன் பரந்தன் சந்திவரை சென்றது. தொடர்ந்து குறித்த பகுதியில் பிரதான வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.