கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் New;W (01) பிற்பகல் அந்தந்த நிறுவனங்களுக்கே கையளிக்கப்பட்டுள்ளன.
இதன்போது 19 வாகனங்களை மீள கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு, அவற்றில் 15 வாகனங்கள், முன் அறிவித்தலுக்கமைய குறித்த நிறுவனங்களின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.
அதன்படி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 8 வாகனங்ளும், நிதி அமைச்சின் 03 வாகனங்களும் தென் மாகாண சபை, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு, வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தலா ஒவ்வொரு வாகனங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 15 வாகனங்கள் மீளக் கையளிக்கப்பட்டன.