சர்வதேச கிரிக்கட் சம்மேளன ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியமையை ஒப்புக்கொண்ட இலங்கை கிரிக்கட் வீரர் பிரவீன் ஜெயவிக்ரமவுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட் ஓராண்டு தடையானது பிரவீன் ஜெயவிக்ரம மீது விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் எந்தவொரு விசாரணையையும் தடுப்பது அல்லது தாமதப்படுத்தல், மறைத்தல், சேதப்படுத்துதல் அல்லது அழித்தல் அல்லது அந்த விசாரணைக்கு தொடர்புடைய அல்லது ஆதாரங்களை மீறிய குற்றச்சாட்டுக்களையே இலங்கை வீரர் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்த ஆண்டு இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடர்பான குற்றச்சாட்டுகளே அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை ஒப்புக்கொண்டதன் மூலம் அவர் மீது மேற்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.