நாட்டில் எலிக்காய்ச்சல் நோயால் இறப்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமிந்த முதுகுட எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெங்கு நோயாளர்களின் இறப்பு வீதத்தை விட எலிக்காய்ச்சல் நோயால் உயிரிழப்பவர்களின் வீதம் அதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் இறப்பு வீதம்:
அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் சுமார் 7,500 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலிக்காய்ச்சல் அறிகுறிகள்
எலிக் காய்ச்சலானது எலிகளால் அல்லது வேறு சில விலங்குகளால்(மாடுகள், எருமைகள்) பரப்பப்படும் காய்ச்சலாகும்.
கிருமித்தொற்றுக்கு உள்ளான எலிகளின் சிறுநீர் ஊடாக எலிக்காய்ச்சலை உருவாக்கும் பக்டீரியா வெளிச்சூழுலுக்கு வந்து சேர்கின்றது.
அத்துடன் இது மனிதரில் இருந்து மனிதருக்கு தொற்றுவதில்லை எனவும் சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந்த பக்டீரியா தேங்கியுள்ள நீரை மனிதர்கள் அருந்துவதன் மூலம் இந்த தொற்றுக்கு உள்ளாக நேர்கின்றது.
காய்ச்சல், உடல் நோதல், தலையிடி உள்ளிட்ட நோய் அறிகுறிகளுடன், கண் சிவத்தல் சிறுநீருடன் இரத்தம் கசிதல் உள்ளிட்ட அறிகுறிகளையும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உணர முடியும்.
மேலும், இதற்குரிய சிகிச்சைப் பெற தவறினால், சிறுநீரகம், இதயம், மூளை, ஈரல் உள்ளிட்டவை பாதிக்கப்படக் கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நோய் மேலும் தீவிரமடையும் போது மரணம் சம்பவிக்கக் கூடிய ஆபத்தும் உண்டு. எலிக்காய்ச்சலானது பக்டீரியாவால் ஏற்படுதால், அதனைக் குணப்படுத்துவதற்கு நுண்ணுயிர் கொல்லி(அன்ரிபயோற்றிக்) சிசிக்சை நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.