நொச்சியாகம, வல்பலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது.
நொச்சியாகம, வல்பலகம பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய கணவனே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவத்தன்று உயிரிழந்த கணவன் மது போதையில் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, மனைவி உயிரிழந்த கணவனின் வாயை துணியால் கட்ட முற்பட்ட போது கணவன் மயக்கமடைந்துள்ளார்.
இதனையடுத்து, மயக்கமடைந்த கணவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் கணவன் ஏற்கனமே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த கணவன் மதுபோதையில் மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் அயல் வீட்டார்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலமானது நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.