பாணந்துறை – பின்வத்த பகுதியில், இன்று அதிகாலை, இரண்டு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் வந்த மூன்று நபர்கள் இந்த தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த பெண்கள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு பெண்களும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் என, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் பின்வத்த – ஊரன்ன படவத்த பகுதியைச் சேர்ந்த 59 மற்றும் 46 வயதுடைய பெண்கள் ஆவர்.