கட்டுப்பாட்டு விலையில் அரிசி சந்தைக்கு வெளியிடப்படுமா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் எம்.எம். நைமுதீன் கூறுகையில், அதற்காக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் மாவட்ட மட்டத்தில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.
அரிசி ஆலை உரிமையாளர்கள் அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ஒரு கிலோகிராம் நாட்டு அரிசியை 218 ரூபாய்க்கு சந்தையில் வெளியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சந்தையில் நாட்டு அரிசியை 220 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் எனவும், செயலாளர் குறிப்பிட்டார்.
கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசி விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் எச்சரித்தார்.