கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களின் உத்தியோகபூர்வ தபால் வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகள் விநியோகம், இன்று (26) ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்ட நடவடிக்கைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொழும்பு மற்றும் வன்னி மாவட்ட பத்திரப் பொதிகள் விநியோகம், நேற்று (25), குறிப்பிட்ட மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் நவம்பர் 4ஆம் திகதிகளில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2024 பொதுதேர்தலுக்கு 738,002 தபால்மூல வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.