மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் ஒருவர் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
யாழ்.நகரில் கடை ஒன்றை நடத்தி வந்த சி.சிவரூபன் (வயது–37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மீற்றர் வட்டிக்கு ஒரு தொகை பணத்தை தனிநபர் ஒருவரிடமிருந்து வாங்கியுள்ளார்.
அந்தப் பணத்துக்கான வட்டி அதிகரித்து அதனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் கடும் மனவுளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தநிலையில் நேற்று வியாழக்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.