Sri Lanka / 06 April 2026

சீனாவிலிருந்து எரிபொருள் கப்பல் இலங்கைக்கு – முக்கிய அறிவிப்பு!

Puthujugam Admin | 1 min read
சீனாவிலிருந்து எரிபொருள் கப்பல் இலங்கைக்கு – முக்கிய அறிவிப்பு!

சீனாவின் ஒப்புதல்: சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் கப்பல் இலங்கைக்கு அனுப்ப திட்டம்

கொழும்பு, ஏப்ரல் 2026

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ஏற்றிய கப்பலை இலங்கைக்கு அனுப்புவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட கூட்டுத்தாபனம், எரிபொருள் கப்பல் அனுப்பப்படவுள்ள திகதி மற்றும் அதில் கொண்டுவரப்படவுள்ள எரிபொருளின் அளவு குறித்து தற்போது இருநாடுகளுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த ஒப்பந்தம் தொடர்பான இறுதி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#CPC Sri Lanka news