சிறுவர்கள் மத்தியில் இன்ஃபுளுவென்சா நோய் அறிகுறிகள் அதிகரித்துள்ளதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார் .
அதிக காய்ச்சல், ஒழுகும் மூக்கு, தொண்டை வலி, தசை வலி, தலைவலி, இருமல், சோர்வாக உணர்தல்… போன்ற இன்ஃபுளுவென்சா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார் .