யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இன்று வியாழக்கிழமை மின்னல் தாக்கத்துக்குள்ளாகி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது – 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அம்பனை பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தந்தைக்கு உணவு எடுத்துச் சென்ற போதே தோட்டப் பகுதியில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தெல்லிப்பழை காங்கேசன்துறைப் பகுதியில் இன்று காலை திடீரென இடியுடன் கூடிய கடும் மழை பெய்தது.
இதன்போதே மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.