மன்னாரில் வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்த ஒருவரின் சடலம் மன்னார் பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இன்று (26) மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் 51வயதுடைய அப்துல் ரஷாக் என்வவரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த கொலையுடன் சம்பந்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.