இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை லங்கா சதொச நிறுவன தலைவர் பசத யாப்பா அபேவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, முட்டை ஒன்றின் விற்பனை விலை 36 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் லங்கா சதொச விற்பனை நிலையங்களில் முட்டை ஒன்று 43 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டதுடன் தற்போது முட்டை ஒன்றின் விலை 7 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதிக்கு போதுமான முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவன தலைவர் பசத யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.