By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ஆசிரியர்  தாக்கி மாணவன் வைத்தியசாலையில்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ஆசிரியர்  தாக்கி மாணவன் வைத்தியசாலையில்!

Published April 4, 2024
Share
1 Min Read
SHARE

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவன் நேற்று (3) பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற போது அவரின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் விசாரித்த போது அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.

இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்கு கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த ஆசிரியை ‘உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தது என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்று கூறியதுடன், மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா என ஆசிரியர் கேட்டுள்ளார்.

அத்துடன் இதனை கேள்வி கேட்கும் நீங்கள் நாளையுடன் பிள்ளையை வந்து கூட்டி சென்றுவிடுங்கள் என்று எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி ஆசிரியர் பதில் அளித்துள்ளார்.

இதனை ஆட்சேபித்த பெற்றோர் சிறுவனை நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொதுவைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுவனின் நெற்றியில் காயமும் தலை மற்றும் கண் பாதிப்படைந்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைக்கும் உட்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,முல்லைத்தீவு ஆரோக்கியபுரம் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் கடந்த முதலாம் திகதி ஆசிரியர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGGED: ஆசிரியர்  தாக்கி மாணவன் வைத்தியசாலையில்!
Editor S.Shanuja April 4, 2024 April 4, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article எந்தவொரு தலைப்பிலும் விவாதத்தில் ஈடுபட தயார்! சஜித் சவால்!
Next Article கடந்த 3 மாதங்களில் 75,000 பேர் வெளியேறினர்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – விராட் கோலியின் முக்கிய முடிவு!

May 13, 2025
இந்திய செய்திகள்

நடிகர் வீடு மீது தாக்குதல்!

December 23, 2024
இந்திய செய்திகள்இலங்கைச் செய்திகள்

இராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் போக்குவரத்து!

December 17, 2024
இந்திய செய்திகள்இலங்கைச் செய்திகள்

இலங்கை – இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு!

December 17, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?