கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் ரயிலில் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் தெஹிவளை, விஹாரை வீதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இளைஞரின் உயிரிழப்பு விபத்தா அல்லது தற்கொலையா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. எனவே குறித்த விபத்துதொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.