மின்சாதனங்கள் விற்பனை செய்பவர்கள் போல் பாசாங்கு காட்டி போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவரை கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
யாழ். கல்வியன்காடு ஞானபாஸ்கரோதயா விளையாட்டரங்கு வீதியில் வைத்து நேற்று (16) மாலை இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் போதைமாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறது என கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இருவரை மறித்து சோதனையிட்டபோது 15 சுடுதண்ணீர் போத்தல்கள், மின்குமிழ்கள், ரோச் லைட்கள் ஆகிய மின்னியல் சாதனங்களுடன் 100 போதை மாத்திரைகள் அவர்களிடம் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட இருவரும் சுன்னாகம் மற்றும் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்கேதநபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மின்சாதனங்கள் விற்பனை செய்வது போல் நடமாடினால் யாருக்கும் சந்தேகம் வராது என்பதால் அதனை விற்பனை செய்வதுபோன்று போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.