வருடாந்தம் 80 மில்லியன் ரூபா விற்றுமுதல் கொண்ட ஒவ்வொரு வணிகமும் பெறுமதி சேர் வரிக்கு (VAT) பதிவு செய்ய வேண்டும்.
மேலும் அனைவரும் பார்க்கும் வகையில் VAT பதிவு சான்றிதழ் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று காலை யட்டியந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது VAT செலுத்துவதற்கான வரம்பு ஆண்டுக்கு 80 மில்லியன் ரூபா. விரைவில்.ஆண்டு வருவாயை 60 மில்லியன் ரூபாவாக குறைக்க தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் .
VAT பதிவு இலக்கம் காட்சிப்படுத்தப்படாவிட்டால், அவ்வாறு செய்யாதவர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.