ரஷ்யாவின் தென் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் களஞ்சியசாலை உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இந்த தாக்குதலில் களஞ்சியசாலையின் பெரும்பகுதியில் தீ பரவியுள்ளது.
எண்ணெய் களஞ்சியசாலையின் நான்கு குதங்களில் தீ பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து 1000 சதுர மீட்டர் பரப்பிற்கு தீ பரவியுள்ளது.
இருப்பினும், இதனால் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என களஞ்சியசாலை அமைந்துள்ள Bryansk பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க முற்பட்ட போது, தீப்பிழம்புகள் எண்ணெய் களஞ்சியசாலையில் வீழ்ந்து தீப்பற்றியதாக Bryansk பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எண்ணெய் களஞ்சியசாலை மீது இரண்டு நாட்களுக்குள் இரண்டாவது தடவையாக உக்ரைன் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ரஷ்யாவின் St Petersburg நகரில் அமைந்துள்ள பிரதான எண்ணெய் களஞ்சியசாலையை இலக்கு வைத்து கடந்த வியாழக்கிழமையும் உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. எனினும், அதனை தாக்கி அழித்ததாக ரஷ்ய தரப்பில் கூறப்பட்டது.