கிளிநொச்சியில் ஒரு கோடி 32 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. விசேட போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தை இன்று நடைமுறைப்படுத்தும் வகையில் பொலிஸ்மா அதிபரால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
அப்பணிப்பின் கீழ் விசேட போதை பொருள் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து அக் குழுவின் ஊடாக இன்று காலை கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாரதிபுரம் பகுதியில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வீடு ஒன்றின் கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 68 கிலோ கிராமிற்கு மேற்பட்ட 30 கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.