பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் 06 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் கோண்டாவில் கிழக்கு பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டினுள் நுழைந்த கும்பல் ஒன்று தளபாடங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் 6 சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினர். குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.